செவ்வாய், 5 நவம்பர், 2013

ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம்
" சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது.
சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.
ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,
" ஏன் ஓடுகிறீர்கள் ? " என்று கேட்க,
" என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது " என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,
" வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்." என்றது. அதற்கு சிங்கம்,
" சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் " என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,
" கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் " என்று சொன்ன உடன்,
இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது

பிடித்திருந்தால் பகிரவும்

கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30
வருடங்களையும், நாயின் 15
வருடங்களையும், குரங்கின் 10
வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான் .

பிடித்திருந்தால் பகிரவும்